உ
நம்பிக்கைக்குரிய இணையதள வாசகர்களுக்கு வணக்கம்!
உங்கள் நன்மதிப்பை பெறத்துடிக்கும் தமிழகத்தில் உள்ள 4 கோடி எழுத்தாளர்களில் நாங்களும் உங்களை சந்திக்க வருகிறோம்!! உங்களுக்கு இந்த வாசகம் வியப்பாக இருக்கலாம், ஆனால் எழுதப்படிக்கத்தெரிந்த எல்லோருமே எங்கள் பார்வையில் எழுத்தாளர்களே!! எதார்த்தவாதிகளின் எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து உருவேற்றி விருட்சமாக வளர்ந்து நிற்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு விதை கொடுத்தவன் எதார்த்த வாதியே!! அப்படி என்றல் நாம் எல்லாருமே எழுத்தாளனே!!
அன்பு வாசர்களுக்கு இந்த விருட்சம் என்ற இணையதளம் மூலம் உங்களில் ஒருவராக சங்கமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விருட்சம் என்றால் வளர்ந்து தழைத்த மரத்துக்குத்தான் விருட்சம் என்று பெயர், ஆனால் விருட்சம் ஒளிந்து இருப்பது ஒரு விதைககுள்தான், இப்படி எண்ணற்ற விருட்சங்கள் விதைக்குள் ஒளிந்து கிடைகின்றனர் அவர்களை விருட்சமாக மாற்றும் சிறு முயற்சிதான் இந்த துவக்கம். விருட்சத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது!! கரியமிலவாயுவை சுவாசித்து உயிர்காற்றை நமக்கு கொடுக்கிறது, பூமி பந்தின் ஆதாரமும் இந்த விருட்சமே! ஆகையால் நாம் அதை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அப்படி என்றால் அதற்கு பங்கம் விளைவிப்பவர்கள் யார்!? ஐந்தறிவு ஜீவிகளே விருச்சதின் இலைகளைத்தான் உண்ணுகிறது, வேரை அல்ல! ஆனால் நாம்...? விருச்சதை பாதுகாப்போம்!!! கனிகளை பெறுவோம்!!! கிளைகளை அல்ல!!! விரைவில் சநதிப்போம் ஒரு கிளையின் கனியுடன் ......
இவர்கள்
K. S. Rajavarma
R. Shanmuganathan